மாங்காய் பச்சடி இனிமேல் இப்படி செய்து பாருங்க! தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்!

Summary: தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் மாங்காய் பச்சடி செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு அற்புதமாக இருக்கும். குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மாங்காய் பச்சை செய்து 10 நாட்கள் வரை ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் பொழுது சாப்பிடலாம்.இந்த மாங்காய் பச்சடி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 200 கிராம் மாங்காய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 3 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1 பச்சை மிளகாய்
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • ½ டீஸ்பூன் மிளகாய் பொடி
  • ½ கப் வெல்லம்
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • 2 டீஸ்பூன் அரிசி மாவு
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உதலில் வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சேர்த்து பொரிந்ததும், வர மிளகாய் சேர்த்து சிவக்கவிடவும்.
  2. அடுத்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பாதி அளவு வெந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் நன்கு வெந்ததும் நறுக்கிய மாங்காய் துண்டுகள் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போனதும், ¾ கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அத்துடன் பெருங்காய பொடியையும் சேர்த்துக்கொள்ளவும் .
  5. மாங்காய் வேகும் சமயத்தில் வெல்லத்தை காய்த்து வடிகட்டி மாங்காய் நன்கு வெந்ததும் ஊற்றவும். 5 நிமிடம் வேகவைக்கவும்.
  6. அடுத்து அரிசி மாவு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து கடைசியாக கருவேப்பிலை சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும்.