கமகமக்கும் கிராமத்து மசாலா மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Summary: மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது.இந்த மீன் குழம்பில் நீங்கள் எந்தவொரு மீனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Ingredients:

  • 150 கிராம் சின்ன வெக்காயம்
  • 3 தக்காளி நறுக்கியது
  • 1 tbsp சீரகம்
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சமிளகாய்
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • 1 1/ tbsp மிளகாய்த் தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • உப்பு
  • 150 கிராம் புளி கரைசல்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து மல்லி இலை
  • தண்ணீர்
  • 1 குழிக்கரண்டி நல்எண்ணெய்
  • 1 tbsp வெந்தயம்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் 150 கிராம் புளியை தண்ணீரில் நன்கு ஊற வைக்கும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் 150 கிராம் சின்ன வெங்காயம் 3 தக்காளி ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. இப்பொழுது ஒரு பாத்திரத்தை கனவில் வைத்து அது சூடாகவும் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடாகவும் அதில் கடுகு வெந்தயம் நறுக்கிய சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  4. தொடர்ந்து 5 பல் பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  5. இவை நன்றாக வதங்கி வரும் பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்டை சேர்த்து வைத்துக் கொள்ளவும் இவை நன்கு வதங்கிய பின்அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சிறிதளவு சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
  6. பின் அதனுடன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  7. குழம்பு நன்றாக கொதித்ததும் அவற்றுடன் மீன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து, மூடியால் மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  8. இப்போது நீங்கள் மூடியை திறந்து பார்த்தால் டேஸ்டியான ‘மசாலா மீன் குழம்பு’ தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.