இரத்தப்பொரியல் இனி இப்படி செஞ்சி பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Summary: இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 ஆட்டு இரதம்
  • 20 சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • ½ கப் தேங்காய் துருவல்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் இரதம் நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்த இரத்தத்தை கைகளால் கரைத்து வதக்கிய வெங்காயத்தில் ஊற்றி, கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் ரத்தத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும்.
  4. பச்சை வாசனை, மற்றும் நிறம் மாறியதும் அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  5. இப்பொழுது சுவையான இரத்தபொரியல் தயார்.