முட்டை வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

Summary: அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, முட்டைகளில் அதிக வகையாக ரெசிபி உள்ளன. முட்டை பொரியல், ஆம்ப்லேட், போன்றவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் முட்டை வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த முட்டை வறுவல் செய்து இட்லி, தோசை, சப்பாத்தி, சுட சுட சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இந்த முட்டை வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் உப்பு
  • 7 முட்டை
  • கருவேப்பிலை இலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு பொடி
  • ½ டீஸ்பூன் சீரக பொடி
  • ¼ டீஸ்பூன் கரம் மசாலா
  • 2½ டீஸ்பூன் மிளகு பொடி
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பான் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து பொரிந்ததும் வேக வைத்த முட்டைகளை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. பிறகு அதே வாணலில் உள்ள அதே எண்ணெயில் கருவேப்பிலை, மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
  3. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.
  4. அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து கொலையாக வேகவும். பாதி வெந்ததும் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு பொடி, சீரக பொடி சேர்த்து மசாலாவில் வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.
  5. நன்கு வதங்கி எண்ணெய் பிரிய வந்ததும், கரம் மசாலா, மற்றும் மிளகு பொடி சேர்த்து கொஞ்சம் நேரம் வதக்கிக்கொள்ளவும்.
  6. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும். பிறகு பிராட்டியை முட்டைகளை பாதி பாதியாக வெட்டி மசாலாவில் போட்டு அதன் மேல் மசாலாவை கரண்டியால் எடுத்து போடவும் ஏன்னென்றால் மஞ்சள் கரு தனியாக வந்துவிடும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி பூட்டு சிறிது நேரம் பிரட்டி அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை நிறுத்தவும்.