கமகமக்கும் செட்டிநாடு அயிரை மீன் குழம்பு இப்படி செய்து! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

Summary: உங்களுக்கு இந்த மீன் குழம்பு சாப்பிட ஆசையா? அப்படி எனில் தொடர்ந்து படியுங்கள் மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஸ்பெஷல் ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்த படி அயிரை மீன் குழம்பு தான். இந்த மீன் குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் செட்டி நாடு ஸ்டைலில் எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசியில் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 250 கிராம் அயிரை மீன்
  • 250 கிராம் வெங்காயம்
  • 2 தக்காளி
  • 10 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ½ டீஸ் ஸ்பூன் கடுகு
  • ½ டீஸ் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு
  • புளி
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அயிரை மீனை கல் உப்பு போட்டு மூடி போட்டு மூடி விட வேண்டும்.
  2. அது துடிப்பு அடங்கியதும் நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீரில் கழுவ வேண்டும்.
  3. அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
  4. பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து நன்றாக தாளித்து வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி, உப்பு தேவையான அளவு சேர்க்க வேண்டும். தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த் தூள், மசாலா தூள், சேர்க்கவேண்டும்.
  5. பிறகு புளித்தண்ணீர் விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை போனவுடன் மீனை போடவும்.
  6. பிறகு 5 நிமிடம் கழித்து தேங்காய் பால் சேர்க்க வேண்டும். கடைசில் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
  7. இப்பொழுது அட்டகாசமான அயிரை மீன் குழம்பு தயார்.