வீட்டில் கோதுமை மாவு இருந்தால் இது போன்று கோதுமை புட்டு செய்து பாருங்க!

Summary: உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்போ இந்த மாரி கோதுமை மாவு இனிப்பு புட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தினமும் ஒரே மாரி உணவை சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க கோதுமை மாவில் இனிப்பு புட்டு செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை முழுவதுமாக படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 1 கப் கோதுமை மாவு
  • ½ கப் சீனி
  • ½ கப் தேங்காய் துருவல்
  • உப்பு

Equipemnts:

  • 1 புட்டுக்குழல்

Steps:

  1. முதலில் கோதுமை மாவை சலித்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.பிறகு மாவை ஆறவைக்கவும்.
  2. மாவு ஆறியதும், உப்பு சேர்த்து அதனுடன் லேசான வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும்.
  3. புட்டுக்குழலில் மாவு, தேங்காய் துருவல் என்று மாறி மாறி குழாய் முழுவதும் மாவை நிரப்பவும். பிறகு அடுப்பில் வைத்து வேகவிடவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு சீனி கலந்து பரிமாறவும்.
  4. அவித்த பாசிப்பருப்பு, வாழைப்பழம், அப்பளத்துடன் பரிமாறலாம்.