அரிசி அலசிய தண்ணீரில் சுவையான ரசம் இப்படி செய்து பாருங்க ? தனியாக வாங்கி கூட குடிப்பார்கள்!

Summary: நாம் பொதுவாக அரிசியை கழுவி விட்டு அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம் உங்களுக்கு தெரியுமா அந்த தண்ணீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளனர் என்று ? இந்த ஊட்டச்சத்து மிக்க அரசி கழுவிய தண்ணீரில் எப்படி மிகவும் சுவையான ரசம் செய்வது, ரசம் செய்ய தேவையான பொருட்கள், அதற்கான செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம்.

Ingredients:

  • ½ tbsp மஞ்சள்தூள்
  • ¼ tbsp மிளகுத்தூள்
  • ¼ tbsp பெருங்காய பொடி
  • 25 கிராம் புளி
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp சீரகம்
  • 6 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • உப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 வர மிளகாய்
  • 1 கொத்து கொத்தமல்லி
  • அரிசி கழுவிய தண்ணீர்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் புளியை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து கழித்து புளி கரைசலை தயார் செய்து கொள்ளவும்.
  2. இந்த வேலை முடிந்தவுடன் அரசி அலசிய தண்ணீரை தேவையான அளவு எடுத்துக் கொண்டு புளி கரைசலை வடிகட்டி அரசி அலசிய தண்ணீர் உடன் சேர்த்து கொள்ளவும்.
  3. பின்பு ஒரு தக்காளி பழத்தையும் இதனுடன் சேர்த்து நன்கு பிசைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் நன்கு சூடேறவும் நாம் எடுத்து வைத்துள்ள கடுகு, சீரகம், கருவேப்பிலை, சோம்பு போன்றவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும்.
  5. பின்பு நாம் எடுத்து வைத்துள்ள வரமிளகாய் மற்றும் பூண்டு பல்லை நன்றாக இடித்து தாளிப்பதுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  6. இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் வாசனை மாறு நிலையில் மிளகாய்தூள், பெருங்காயத்தூள், மஞ்சத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு 2 அரை நிமிடங்கள் வதக்கவும்.
  7. அதன் பின்பு நாம் தயார் செய்துள்ள அரிசி அலசிய தண்ணீரும் புளி கரைசலும் கலந்த தண்ணீரை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  8. நன்றாக கொதிக்கும் பொழுது நாம் வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை ரசத்தின் மேல் தூவி ரசத்தை இறக்கி விடவும் இப்பொழுது அரிசி அலசிய தண்ணிரில் செய்த ரசம் தயாராகிவிட்டது.இதை இனி பரிமாறிக் கொள்ளலாம்.