மும்பை பாகுபலி மசால் தோசை இப்படி ஒரு முறை செய்து பாருங்க சாதரண தோசைக்கு ஒரு மாறதலாக இருக்கும்!

Summary: இந்த தோசையை நாம் செய்வதற்கு தோசை மாவை தேவையில்லை உடனடியாக மற்றும் வேகமாகவும் இந்த தோசையை காலை அல்லது இரவு உணவாக நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக இந்த தோசையை குழந்தைகள் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் மொறு மொறுன்னு இருக்கும் இந்த தோசையை மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே வேகமாகவும் செய்துவிடலாம்.

Ingredients:

  • 1 கப் கடலை மாவு
  • 3 tbsp ரவை
  • 1 tbsp உப்பு
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • தண்ணீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 இஞ்சி
  • 1 தக்காளி
  • 1 கேரட்
  • 4 பச்சை மிளகாய்
  • வெண்ணெய்
  • ½ tbsp கரம் மசாலா

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பவுலில் ஒரு கப் அளவிற்கு கடலை மாவு சேர்த்து அதனுடன் மூன்று டீஸ்பூன் ரவை மற்றும் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் கரைத்த கடலைமாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தக்காளி கேரட், பெரிய வெங்காயம், இஞ்சி போன்ற பொருட்களை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் சிறிது எண்ணெயை ஊற்றவும்.
  4. பின் இரண்டு கரண்டி மாவு ஊற்றி தோசையை பெரிதாக விரித்து விடுங்கள். பின் தோசையின் மேல் சிறிது வெங்காயம் தூவி விட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய இஞ்சி தூவி, அதன் மேல் நறுக்கிய தக்காளி தூவி, பின் துருவிய கேரட்டையும் தூவி, சிறிது கொத்தமல்லியை தூவி பின் அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் துருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. பின் தோசை கல்லை மூடியை வைத்து மூடி விடுங்கள் சிறிது நேரம் கழித்து தோசை நன்றாக வெந்து வந்ததும் தோசை இடது பக்கத்தில் இருந்து ஒரு மடி மடித்து, பின் வலது பக்கத்தில் இருந்து ஒரு மடிப்பு மடித்து தோசையை மூன்றாக வெட்டி சாப்பிட பரிமாறுங்கள் அவ்வளவுதான் மும்பை பாகுபலி தோசை இனிதே தயாராகிவிட்டது.