சுவையான எலுமிச்சை ரசம் இப்படி செய்து பாருங்க! சுடான சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால் அப்படி இருக்கும்!

Summary: எப்பொழுதும் தக்காளி ரசம், புளி ரசம், என்று வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த எலுமிச்சை ரசம் ஒரு முறை செஞ்சி பாருங்க வெயிலுக்கு ஏற்ற சுவையில் இருக்கும்.சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும், சுலபமாக வீட்டிலே ருசியாக செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கப் துவரம் பருப்பு
  • 2 தக்காளி
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ¼ டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 1 இஞ்சி
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் சாம்பார் பொடி அல்லது ரசம் பொடி
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • உப்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு
  • ¼ டீஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பாத்திரம்

Steps:

  1. முதலில் பருப்பை நன்கு கழுவி ஒரு குக்கரில் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், ¼ டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் 3 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து பருப்பு வேகும் சமயத்தில் உரலில் மிளகு, இஞ்சி, சீரகம்,சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடித்துக்கொள்ளவும்.
  3. பிறகு பருப்பு வெந்ததும் தக்காளி மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும், பிறகு பருப்பை மத்து வைத்து கடைந்துகொள்ளவும்.
  4. அடுத்து தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை இதில் சேர்த்து அத்துடன் கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிடவும்.
  5. வதங்கியதும் வேக வைத்த பருப்பு, மற்றும் தக்காளி சேர்த்து அதில் ரசப்பொடி, பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  6. 5 நிமிடம் கழித்து நூறை கட்டியதும் அடுப்பை நிறுத்தவும்.
  7. இனொரு பாத்திரத்தில் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு அதில் எலுமிச்சை சாறு ஊற்றி உடனே கொதிக்க வைத்த ரசத்தை இதில் ஊற்றவும்.
  8. இப்பொழுது சுவையான எலுமிச்சை ரசம் தயார்.