காலிப்ளவர் ப்ரை மொறு மொறுன்னு இப்படி செய்து பாருங்க இதன் சுையே தனி தான்!

Summary: காலிபிளவர் ப்ரை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஹோட்டல்களில் விற்கப்படும் காலிபிளவர் ப்ரை அவ்வளவு சுவையாகவும், மொறு மொறுன்னு இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் வீட்டில் செய்யப்படும் காலிபிளவர் ப்ரை ஹோட்டல் சுவை அளவிற்கு வராது. ஆனால் இனி கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே ஹோட்டல்களில் தரப்படும் காலிபிளவர் சுவையில் சுலபமாக செய்து விடலாம்.

Ingredients:

  • மஞ்சள் தூள்
  • 250 கிராம் காலிப்ளவர்
  • ¼ கப் கான்ப்ளர் மாவு
  • ¼ கப் அரிசி மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • தனி மிளகாய் தூள்
  • உப்பு
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ¾ டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கஸ்தூரி மேதி
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நறுக்கிய காலிபிளவரை நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து அதில் காலிபிளவரை போட்டு 5 நிமிடம் அப்படியே வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அதனை பச்ச தண்ணீரில் 2 அல்லது 3 முறை கழுவி வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு பௌலில் கான்ப்ளர் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, காஸ்மீரி மிளகாய் தூள், தனி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் கலந்து விடவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள காலிபிளவர் மாவில் சேர்த்து நன்கு கலந்து ½ மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  5. பிறகு ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் மிதமான தீயில் வைத்து கலந்து வைத்துள்ள காலிபிளவர் துண்டுகளை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
  6. இப்பொழுது சுவையான ஹோட்டல் ஸ்டைல் காலிபிளவர் தயார்.