Summary: கிழங்கு வகைகளில் அதிக மாவுச் சத்து உள்ள கிழங்குதான் கப்பக்கிழங்கு- கோதுமை மாவை விட அதிகமான மாவுச் சத்து கப்பக்கிழங்கில் தான் உள்ளது. ஆனால் மற்ற சத்துக்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் கப்பக்கிழங்கு குழந்தைகளுக்கு சிறந்தது. கப்பையை சாப்பிட்டுவிட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் இருந்தால் உடல் எடை அதிகரித்து விடும். இந்த கப்பக்கிழங்கோடு முருங்கைக் கீரை சேர்த்து செய்வதால் நார்ச்சத்து கிடைப்பதோடு ஜீரணத்துக்கும் உதவுகிறது. செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுறுசுறுப்புடன் தென்படுவீர்கள்.