காரசாரமான கல்யாண வீட்டு கார குழம்பு இப்படி செய்து பாருங்க!

Summary: கல்யாண வீட்டு கார குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஆனால் பலருக்கு கார குழம்பு எப்படி செய்வதென்று தெரியாது அதுவும் கல்யாண வீட்டு முறையில் எப்படி செய்வதென்று தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் கல்யாண வீட்டு கார குழம்பு நம் வீட்டிலேயே செய்து விடலாம். எப்படி இந்த கார குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • ½ டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1½ டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  • 2 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 5to6 வரமிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ¾ டீஸ்பூன் வெந்தயம்
  • ¾ டீஸ்பூன் எள்ளு
  • ¼ டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2¼ கப் புளி தண்ணீர்
  • 2½ டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1½ டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • ½ டீஸ்பூன் கட்டி பெருங்காயம்
  • 6 சுண்டைக்காய் வத்தல்
  • 15to20 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • காஸ்மீர் மிளகாய் தூள்
  • உப்பு
  • முருகைக்காய், கத்திரிக்காய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் குழம்பு பொடி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெறுப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, துவரம் பருப்பு, சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அதில் மல்லி விதை, சின்ன வெங்காயம், கருவேப்பிலை இலை, வரமிளகாய், மிளகு, சீரகம், வெந்தயம், எள்ளு, சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்து கொள்ளவும்.
  3. பொன்னிறமாக சிவந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் சிவந்ததும் அதனை தட்டில் மாத்தி நன்கு ஆறவிடவும்.
  4. ஆறியதும் மிக்சியில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும், வெந்தயம், கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்து சிவந்து வரவேண்டும் .
  6. நன்கு சிவந்து வந்த பிறகு சின்ன வெங்காயம், சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கருவேப்பிலை, தக்காளி மற்றும் காஸ்மீரி மிளகாய் தூள் ,சேர்த்து கொழைய வதக்கவும்.
  7. வதங்கியதும் நறுக்கிய முருகைக்காய், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். சிறிது கத்திரிக்காய் நிறம் மாறியதும் குழம்பு பொடி சேர்த்து கலந்து அரைத்து வைத்துள்ள மசாலா விழுது மற்றும் 2½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  8. எண்ணெய் பிரித்து வந்தவுடன் புளி தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இரக்கவும்.
  9. இப்பொழுது சுவையான கார குழம்பு தயார்.