கறிவேப்பிலை குழம்பு இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் ஊற்றி சாப்பிட அற்புதமாக இருக்கும்!

Summary: விதவிதமான குழம்புகளில் கறிவேப்பிலை குழம்பு ரொம்பவே சுவையான ஒரு குழம்பாக இருக்கிறது.ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழந்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள்.

Ingredients:

  • 2 கப் கறிவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 Tsp வெந்தயம்
  • 2 வர மிளகாய்
  • 15 பற்கள் பூண்டு
  • 1 Tsp சீரகம்
  • 1 Tsp கடுகு
  • புளி சாறு
  • 1 Tsp மஞ்சள் தூள்
  • 1 Tbsp மிளகாய் தூள்
  • 1 Tbsp மல்லி தூள்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 Tsp நாட்டு சர்க்கரை
  • உப்பு
  • 1 Tsp கடுகு
  • 1 Tsp சீரகம்
  • எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கறிவேப்பிலையை சேர்த்து 5-10 நிமிடம் வறுத்து, அத்துடன் பாதி பூண்டு பற்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்கவும்.
  2. அதன் பின்குளிர்ந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரனம், வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளித்து,
  3. பின் மீதம் இருக்கும் பூண்டு பற்கள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
  4. பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
  5. அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்கவும்.
  6. இறுதியில் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அத்துடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு ரெடி!