இட்லி தோசைக்கு ஏற்ற ரூசியான தக்காளி குழம்பு செய்வது எப்படி ?

Summary: நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சுழற்சி சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த குழம்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த எவையான தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்

Ingredients:

  • 4 முழு தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 கப் தண்ணீர்
  • ½ கப் துருவிய தேங்காய்
  • ½ tbsp சீரகம்
  • 6 வர மிளகாய்
  • 2 tbsp பொறி கடலை
  • எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ கப் தண்ணீர்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் குக்கரை எடுத்துக்கொண்டு நான்கு முழு தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் நறுக்கியது. அதனுடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்து கொள்ளவும்.
  2. அதன் பின் குக்கரை இறக்கிக் கொள்ளவும். தக்காளியின் தோல்களை நீக்கிவிட்டு அதை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு நன்றாக தாளிக்கவும்.
  4. பின் கடுகு பொறிந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டையும் அதனுடன் அரைக்கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  6. பின்பு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், காரத்திற்கு ஏற்ப வர மிளகாய், பொரிகடலை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு குழம்பு கொதித்ததும் இந்த பேஸ்ட்டையும் குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  7. பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு குழம்பு நன்றாக கொதித்து வந்ததும் சிறிது கொத்தமல்லியை நறுக்கி தூவி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான தக்காளி குழம்பு தயாராகி விட்டது.ழ