அவல் பாயசம் 10 நிமிடத்தில் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பாயசம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது தித்திக்கும் சுவையில் அவ்வளவு டெஸ்ட் ஆகா இருக்கும். அந்தவைகளில் அவல் பாயசம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இந்த பாயசம் சுலபமாக குறைந்த நேரத்தில் செய்துவிடலாம். அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த அவல் பாயசம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 2 டீஸ்பூன் நெய்
  • ½ கப் அவல்
  • 4 கப் பால்
  • 7 முந்திரி
  • 7 பாதம்
  • ¼ கப் சர்க்கரை
  • குங்கும பூ
  • தேங்காய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி அவலை நன்கு பொரிந்து வருமாறு மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு அடிகனமான பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் பால் ஊற்றி நன்கு காயவைத்துக்கொள்ளவும். பால் கொதிக்கும் பொழுது முந்திரி, மற்றும் பத்தாம் பருப்பை தண்ணீரில் நன்கு ஊறவைத்து தோல் நீக்கி மிக்சியில் சேர்த்து அரைத்து கொதிக்கும் பாலில் சேர்த்துக்கொள்ளவும்.
  3. பால் நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள அவலை சேர்த்து வேகவிடவும். ஏலக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
  4. வெந்ததும் குங்கும பூ சேர்த்து நெயில் வறுத்த தேங்காய் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும்.
  5. இப்பொழுது சுவையான அவல் பாயசம் தயார்.