வாழைப்பூ அடை இப்படி செய்து பாருங்க! வழக்கமாக சுடும் தோசைக்கு ஒரு மறுதலாக இருக்கும்!

Summary: வாழைப்பூ அடை. வாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு அடை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம்.வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப் பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம். ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் வாழைப்பூவில் அடை செய்து கொடுத்தால் மிகவும் ருசியாக இருக்கும். வாழைப்பூ சாப்பிட மாட்டேன் என்று கூறும் குழந்தைகளுக்கு இப்படி செய்து தரலாம். இது அனைத்து சத்துகள் நிறைத்த சம சீரான திடமான உணவு. வித்தியாசமான வாழைப்பூ அடை ரெசிபி உங்களுக்காக.

Ingredients:

  • 1/2 கப் புழுங்கரிசி
  • 1/2 கப் பச்சரிசி
  • 1 கப் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 கப் வாழைப்பூ
  • 3 வர மிளகாய்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp சோம்பு
  • இஞ்சி
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 tsp பெருங்காயம்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுல்
  • 1 மிக்ஸி ஜார்
  • 1 கடாய்
  • 1 தோசைக்கல்

Steps:

  1. அரிசியையும் பருப்புகளையும் ஒரு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் அரிசியையும் பருப்புகளையும்,சோம்பு ,மிளகு,இஞ்சி,தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம், சேர்த்து மாவாக அரைக்கவும், சின்ன வெங்காயம் சேர்த்தால் மாவுடன் கடைசியில்ஒரு சுற்று விடவும்.
  2. சின்ன வெங்காயம் கொரப்பாக அரைபடவேண்டும். பெரிய வெங்காயம் என்றால் cut செய்து மாவுடன் கலக்கவும். வாழைப்பூவை ஆய்ந்து உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மாவுடன் வேக வைத்த வாழைப்பூ,கட் செய்து வைத்து இருக்கும் வெங்காயம் உப்பு பெருங்காயம் சேர்த்து கலந்து, பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி மாவை விடவும்.
  4. ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்க வேண்டும்.இப்போது சூடான அடை தோசை தயார் ஆகிவிடும். இதை தேங்காய் சட்னியுடன் or வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.