கடாய் பன்னீர் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! பன்னீர் வைத்து இப்படி கூட செய்யலாம்!

Summary: கடாய் பன்னீர். சவையான கடாய் பன்னீர் வீட்டிலேயே செய்து கொடுங்கள். புரோட்டீன் சத்து அதிகமுள்ள பன்னீரை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இதனை பலரும் வீட்டில் செய்வதில்லை. ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லும் பொழுது பன்னீர் கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஏனென்றால் அங்கு செய்யப்படும் பன்னீர் கிரேவியின் சுவை நாம் வீட்டில் செய்யும் கிரேவியின் சுவை போன்று இல்லாமல் மிகவும் சூப்பராக இருக்கும். எனவே குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு ஹோட்டலில் செய்யும் அதே சுவையில் இந்த கடாய் பன்னீர் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து போகின்றோம்.

Ingredients:

  • 200 கிராம் பன்னீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp மல்லித்தூள்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 3 tsp எண்ணெய்
  • 1 tsp சோம்பு
  • 4 கிராம்பு
  • 2 பட்டை
  • 6 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 பெரிய பவுல்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான சோம்பு, கிராம்பு, பட்டை, பூண்டு, பச்சை மிளாகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  2. பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
  3. எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பன்னீர் தயார்