தட்டு கடை எலுமிச்சை சாதம் இப்படி செய்து பாருங்க! யாரு வேண்டானு சொல்ல மாட்டாங்க!

Summary: சாதம் – குழம்பு – கூட்டு என ஒரே முறையில் நாம் சமைத்து சாப்பிட்டு சலித்து போய் இருப்போம். இந்த எலுமிச்சை சாதம், அடிக்கடி செய்யாவிட்டாலும், கோவிலுக்கு சென்றாலோ, அழகு பயணங்கள் மேற்கொண்டாலும் நாம் உடனே செய்வது, இந்த எலுமிச்சை சாதம் தான். அந்த எலுமிச்சை சாதத்தை, ஒரு தரம் இந்த முறையில் செய்து பாருங்கள். எலுமிச்சை சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Ingredients:

  • 3 tsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 1 tsp உளுத்தம் பருப்பு
  • 1 tsp கடலைப்பருப்பு
  • 15 முந்திரிப் பருப்பு
  • 3 tsp வறுத்த கடலை பருப்பு
  • 2 tsp வர மிளகாய்
  • 3 tsp பச்சை மிளகாய்
  • 1/4 tsp பெருங்காயம்
  • கருவேப்பிலை
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 3 tsp லெமன் சாறு
  • உப்பு
  • மல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுல்

Steps:

  1. முதலில் கடாயில் என்னை ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சேர்த்து நிறம் மாறும் வரை கிளறி விட்டு, முந்திரிப் பருப்பு, வறுத்த கடலைப்பருப்பு சேர்த்து வறுபடும் வரை கிளறி விடவும்.
  2. நன்கு வறுபட்டதும் வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து, வர மிளகாய் நிறம் மாறும் வரை கிளறி விடவும். பின் கருவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  3. தீயின் அளவை குறைத்து விட்டு, எடுத்து வைத்த எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். நன்கு வறுபட்டு கொதி வந்தவுடன், வடித்து வைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, நறுக்கி வைத்த மல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார்.