நாவில் எச்சி ஊறும் மசாலா இட்லி செய்வது எப்படி ?

Summary: வீட்டில் எப்போதும் வழக்கம் போல இட்லி, தோசை, மற்றும் சப்பாத்தி என்று இதையை தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நீங்கள் வித்தியாசமான முறையில் இட்லி மாவை வைத்து சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த மசாலா இட்லியை முயற்சி செய்து பாருங்கள். இந்த மசாலா இட்லியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். இதில் சுவைக்கும் , ரூசிக்கும் கூட பஞ்சம்மில்லை என்று சொல்லாம் அந்த அளவுக்கு இந்த மசாலா இட்லி பிரமாதமா இருக்கும். இன்று இந்த மசாலா இட்லியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்

Ingredients:

  • 1 பெரிய வெங்காயம்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp வெண்ணெய்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • 2 tbsp இட்லி பொடி
  • ½ tbsp மல்லித்தூள்
  • ½ tbsp உப்பு
  • 2 tbsp தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பின் எண்ணெய் சூடேறியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை அதில் போடவும்.
  2. பின் இதனுடன் வெண்ணையையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் பச்சை மிளகாயை சிறுது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  3. பின்பு இதனுடன் இரண்டு தக்காளியையும் பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு தக்காளி நன்றாக மசிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும் தக்காளி மசிந்து வந்ததும்.
  4. பின்பு அதில் மஞ்சள் தூள், இட்லி பொடி, மல்லித்தூள், உப்பு, மற்றும் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் இதனுடன் சிறிது கொத்தமல்லியை தூவி நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. அடுத்து இப்படி நாம் வதக்கிய மசாலாவை தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த மசாலாவை ஒரு குழி கரண்டி எடுத்து தோசை கல்லில் வைத்து. மாசால மூழ்கும் வரை இட்லி மாவை அதன் மேல் ஊற்றவும்.
  6. மசாலாவின் மேல் இட்லி மாவை ஊற்றியதும் மாவின் மேல் இட்லி பொடியை தூவி சிறிது கொத்தமல்லியும் தூவி, வெண்ணையையும் சேர்த்து கொள்ளவும். பின்பு அடிப்பகுதியில் இட்லி நன்றாக வெந்தவுடன் அடுத்த பக்கமும் திருப்பி போட்டுக் கொள்ளவும்.
  7. இட்லி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்து வந்ததும் தோசை கல்லில் இருந்து எடுத்துக் கொள்ளவும். இப்படியாக மீதி இருக்கும் மசாலாவையும் கல்லில் வைத்து இட்லி மாவை மேல் ஊற்றி மசாலா இட்லியை தயார் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் அதிக சுவையும் ரூசியும் கொண்ட மசாலா இட்லி இனிதே தயாராகிவிட்டது.