முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Summary: முருங்கைக்காய் மசாலா, மணமணக்க முருங்கைக்காய் மசாலா இப்படி ஒருமுறை சமைத்து பாருங்கள்!!!!!முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைக்கலாம். குழம்பு வைக்கலாம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களை வைத்து முருங்கைக்காய் மசாலா எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி முருங்கைக்காய் மசாலா செய்தால் இதை சுடச்சுட சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி, வெரைட்டி ரைஸ்க்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

Ingredients:

  • 5 முருங்கைக்காய்
  • 5 பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tsp மிளகுத்தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • 1/4 கப் தேங்காய்
  • 1/2 tsp சோம்பு
  • 2 tsp எண்ணெய்
  • 1/2 இன்ச் பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்

Equipemnts:

  • 1 வாணலி
  • 1 பெரிய பவுல்

Steps:

  1. முதலில் முருங்கைக்காயை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  2. பின்பு அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் முருங்கைக்காய், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதற்குள் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, நண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. முருங்கைகாயானது நன்கு வெந்த பின், அதில் தேங்காய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் மசாலா ரெடி!!!