சுவையான ரவா உருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை உணவு!

Summary: நாம் பொதுவாக காலை உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இது போன்ற டிபன் உணவாக செய்வோம் இல்லை என்றால் ஏதாவது சாதம் ரெசிபி செய்து சாப்பிடுவோம். இப்படி ஒரே மாதிரியான உணவுகளையே அடிக்கடி செய்வதற்கு பதில் நீங்கள் இதுபோன்று புதுமையான முறையில் ரவா உருண்டையை காலை உணவாக செய்து சாப்பிடலாம் அற்புதமான சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி உங்களை தொல்லை பண்ணுவார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் அவல்
  • 1 கப் வறுக்காத ரவா
  • தண்ணீர்
  • 1 tsp இஞ்சி
  • 1 tsp சீரகம்
  • உப்பு
  • 2 tsp எண்ணெய்
  • 1/2 tsp கடுகு
  • 1/2 tsp உளுந்தம் பருப்பு
  • 1/2 tsp கடலைப்பருப்பு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிள்ளை
  • இட்லி பொடி
  • 1 tsp நெய் ( அ ) எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அவல் எடுத்து நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும். அதில் வறுக்காத ரவை சேர்த்து, ரவை மூழ்கும் அளவுக்கு சுடுதண்ணீர் ஊற்றி கலந்து ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
  2. பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு கலந்து எடுத்த ரவா, அவல் மாவை, சின்ன சின்ன உருண்டையாக எடுக்கவும்.
  3. இட்லி தட்டில், உருட்டி எடுத்த ரவா, அவல் உருண்டையை வைத்து ஒரு ஏழு நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்து எடுத்த பின் கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
  4. அதில், நாம் வேகவைத்து எடுத்த ரவா, அவல் உருண்டைகளை சேர்த்து, அதன் மேல் இட்லி பொடியை, சாரல் போல தூவி விட்டு, நீங்கள் விரும்பினால் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால், அவல் ரவா உருண்டை தயார்.