தேங்காய் பால் லட்டு இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Summary: லட்டு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. தீபாவளி வந்துவிட்டால் எல்லோருக்கும் நினைவில் வருவது பட்டாசும், லட்டு தான். ரவா லட்டு, பூந்தி லட்டு, புரோட்டின் லட்டு, கேப்பை லட்டு என பல வகைகளில் நாம் லட்டு செய்து சாப்பிட்டு உள்ளோம். ஒருமுறை இந்த தேங்காய் பால் லட்டு செய்து சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே ரொம்ப பிடிக்கும். இந்த பதிவில் லட்டு செய்வது எப்படி, என்ன உபகரணங்கள் தேவை என்பதை கீழ் வருமாறு காண்போம்.

Ingredients:

  • 2 1/4 கப் தேங்காய்
  • 2 tsp நெய்
  • 1 1/2 கப் பால்
  • 3/4 கப் வெள்ளை சர்க்கரை
  • 1/2 tsp ஏலக்காய் பொடி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுல்

Steps:

  1. முதலில் கடாயில் ஒரு 1/4 கப் துருவிய தேங்காய் எடுத்து நன்கு வறுத்து மாற்றி வைக்கவும். அடுத்ததாக அதே கடாயில் நெய் உன்னை விட்டு, 2 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்கு வறுக்கவும்.
  2. தேங்காய் நன்கு வறுப்பட்டபின், எடுத்து வைத்த பால் சேர்க்கவும். பால் ஏற்கனவே கொதிக்க வைத்து குளிர்ந்த பாலாக இருக்க வேண்டும். நன்கு கட்டித் தன்மை வரும் வரை கலந்து கொள்ளவும்.
  3. பின் வெள்ளை சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்து கட்டித்தன்மை வரும்வரை கலந்து கொள்ளவும். அதன் பின் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பின் கடாயை இறக்கி வைக்கவும்.
  4. கை சூட்டின் பதம் வரும் வரை வைத்திருக்கவும்.பின் கையில் எடுத்து நன்கு அழுத்தி உருண்டை பிடித்துக் கொள்ளவும். அந்த உருண்டையை நாம் ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்திருந்த தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும். ஒரு சுவையான தேங்காய் பால் லட்டு தயார்.