தேங்காய் பால் கோதுமை அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Summary: ஹல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நெய், எண்ணெய், வெள்ளை சக்கரை இவை எதுவுமே இல்லாமல் வாயில் போட்டதும் நழுவிக் கொண்டு ஓடும் இந்த தேங்காய் பால் கோதுமை அல்வா சுவையில் சிறந்தது. ஒரே ஒரு முறை மட்டும் நீங்கள் செய்து பார்த்தால் போதும். அவ்வளவுதான் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி கேட்பார்கள். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு இந்த அல்வா பிடித்த இனிப்பு பொருளாக மாறிவிடும். இந்தப் பதிவில் தேங்காய் பால் கோதுமை ஹல்வா எப்படி செய்வது, என்னென்ன உபகரணங்கள் தேவை என்பதை பார்ப்போம்

Ingredients:

  • 1 1/2 கப் கோதுமை மாவு
  • 3 1/4 கப் தண்ணீர்
  • 2 கப் தேங்காய் பால்
  • 2 கப் வெள்ளம்
  • 10 முந்திரிப் பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுல்

Steps:

  1. முதலில் எடுத்து வைத்த கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் இருக்க வேண்டும்.அதில் மூன்று கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. இரண்டு மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் மாவின் பதம் மெரூரதுவாக இருக்கும். நன்கு கரைத்து விட்டு வடிகட்டி எடுக்கவும்.வடிகட்டி கரைத்து எடுத்த கோதுமை பாலை ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
  3. தண்ணி தனியாக பால் தனியாக பிரிந்து விடும். தண்ணியை வெளியே எடுத்துவிட்டு பார்த்தால் கோதுமை பால் கெட்டியாக கிடைத்திருக்கும். அதில் எடுத்து வைத்த தேங்காய் பால் சேர்க்கவும்.
  4. கடாயில் எடுத்து வைத்த வெள்ளத்தை சேர்த்து, அதில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அந்தப் பாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. எடுத்து வைத்த கோதுமை பாலை கடாயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கட்டித் தன்மை வரும்வரை கலந்து கொண்டே இருக்கவும்.
  6. ஊற்றிய தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கலந்து கொண்டே இருக்கவும். அதில் முந்திரிப் பருப்பு சேர்த்து வறுபடும் வரை கலந்து கொண்டே இருக்கவும். ஒரு சுவையான தேங்காய் பால் கோதுமை ஹல்வா தயார்.