தேங்கய்ப்பால் மட்டன் ஸ்டூவ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! அப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Summary: தேங்காய்ப்பால் மட்டன் ஸ்டூவ்மிகவும் சுவைமிக்கது. குறிப்பாக ஆப்பத்திற்கு இந்த குழம்பை தொட்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும். இது தவிர இட்லி, தோசை சுடச்சுட சாதத்தில் போட்டு இந்த தேங்காய்ப்பால் மட்டன் ஸ்டூவ குழம்பை சாப்பிடலாம். மாதத்தில் ஒரு முறையாவதும் தேங்காய்ப்பால் மட்டன் ஸ்டூவ் இந்த செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் மிகவும் நல்லது. சுவைமிகுந்த இந்த தேங்காய்ப்பால் மட்டன் ஸ்டூவ் குழம்பை பக்குவமான முறையில் சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

Ingredients:

  • 1/2 கிலோ மட்டன்
  • 1 பட்டை
  • 8 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 10 மிளகு
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 tsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 கப் தேங்காய் பால்
  • 2 tsp நெய்
  • 15 எண்ணம் கருவேப்பிலை
  • இந்துப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மட்டனை நன்றாக கழுவி ,ஒரு குக்கரில் மட்டன், இந்துப்பு தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின் தேங்காயை துருவி மிகஸியில் சேர்த்து மையாக அரைத்து, பின் பிழிந்து பால் எடுத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் நெய் விட்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு தாளிக்கவும். பின் நறுக்கிய இஞ்சி பூண்டு விழுது – வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் நாம் வேக வைத்த மட்டன் மற்றும் அதன் தண்ணீர் (ஸ்டாக் ) சேர்த்து நன்கு கிளறி விடவும் அதனுடன் தேவையான உப்பு சேர்க்கவும் கிளறவும்.
  4. இரண்டு நிமிடம் கொதித்த பிறகு தேங்காய்ப்பால் சேர்த்து நுரை வரும்போது இறக்கவும். (கொதிக்க விட வேண்டாம்) சுவையான தேங்காய்ப்பால் மட்டன் ஸ்டூவ் தயார்.