பூண்டு மிளகு சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Summary: மிளகு சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சளி பிடித்தவர்களுக்கு, குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம் சட்டுனு 10 நிமிடத்தில் செய்து விடலாம். இத்துடன் காலிப்ளவர் பொரியல். உருளை கிழங்கு பொரியல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

Ingredients:

  • 1½ டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 வரமிளகாய்
  • 10 பல் பூண்டு
  • ¾ கப் பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் நெய்
  • முந்திரி பருப்பு
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ½ கப் பாசுமதி அரிசியை ஊறவைத்து பொல பொலவென்று வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்த்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும்.
  3. வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் வேகும் அளவிற்கு வதக்கவும்.
  4. வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த சாதத்தை சேர்த்து மிளகு தூள் சேர்த்து, அத்துடன் நெய் சேர்த்து கலந்து நெய்ல் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
  5. இப்பொழுது சுவையான மிளகு சாதம் தயார்.