வெந்தய கீரை இட்லி இப்படி செய்து பாருங்க! வழக்கம் போல் ஓரே மாதிரியாக செய்வதற்கு இப்படி செய்யலாம்!

Summary: மணக்க மணக்க வெந்தயக்கீரை இட்லி இப்படி செஞ்சு பாருங்க. இட்லி எல்லோரது வீட்டிலும் செய்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் சாப்பிடப்படும் உணவு. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தாலும் மருத்துவர் இட்லி குடுக்க அறிவுறுத்துவார் .அப்படிப்பட்ட இட்லியை வேறு விதமாக வெந்தயம் உயோகித்து செய்தல் மிகுந்த நறுமணத்துடன் இருக்கும் .கோடை காலத்திற்கு இதமாக இந்த வெந்தய இட்லி யை செய்து ருசித்து பாருங்கள்.

Ingredients:

  • 4 கப் இட்லி மாவு
  • 3 கட்டு வெந்தய கீரை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 Tbsp எலுமிச்சை சாறு
  • உப்பு
  • 8 வர மிளகாய்
  • 2 Tbsp கடலை பருப்பு
  • 4 Tsp ஊளுந்த பருப்பு
  • 3 Tbsp துருவிய தேங்காய்
  • 1/2 Tsp சீரகம்
  • 1/2 Tsp பெருங்காயம்
  • தாளிக்க
  • 1/4 Tsp கடுகு
  • 3 Tsp உளுந்தம் பருப்பு
  • 2 Tbsp நெய்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. வெந்தயக்கீரை இட்லி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
  2. வெந்தயக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பிறகு, பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி, அதனுடன் இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச்சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.அவ்வளவு தான் வெந்தய கீரை இட்லி தயார்.