சுவையான கிராமத்து சுண்டைக்காய் துவையல் இனி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: கிராமங்களில் சுண்டைக்காய் வைத்து துவையல் செய்வார்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் பலருக்கும் சுண்டைக்காய் பிடிக்காது ஏனென்றால் அது கசப்பாக இருக்கும் என்பதால் பிடிக்காது. அவை கசப்பாக இருந்தாலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. வாரத்தில் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையாவதும் சுண்டைக்காவை உணவில் சேர்த்துக்கொள்ளவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு மிகவும் நல்லது. அரோக்கியம்தும் கூட.

Ingredients:

  • 70 கிராம் சுண்டைக்காய்
  • ½ டீஸ்பூன் எண்ணெய்
  • ¼ கப் உளுத்தம் பருப்பு
  • 2 பல் பூண்டு
  • புளி
  • 10 வரமிளகாய்
  • ¼ டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • ¼ கப் தேங்காய்

Equipemnts:

  • 1 கடாய்
  • மிக்ஸி

Steps:

  1. முதலில் சுண்டைக்காவை பாதி பாதியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு அதனை தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
  2. அடுத்து ஒரு பாண் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, பூண்டு, சேர்த்து கொஞ்சம் சிவக்க வதக்கவும்.
  3. பிறகு அதில் புளி, மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு சிவக்க வறுத்து அதனை தனியாக தட்டில் எடுத்துக்கொள்ளவும். ஆற வைக்க வேண்டும்.
  4. அடுத்து அதே பானில் எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் மெதுவாக நிறம் மாற வறுக்கவும். பிறகு அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
  5. அடுத்து ஒரு மிக்சியில் முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, பூண்டு அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  6. பிறகு அரைத்ததோடு துருவிய தேங்காய், வதக்கி வைத்துள்ள சுண்டைக்காவை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  7. இப்பொழுது சுவையான சுண்டைக்காய் துவையல் தயார்.