கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!

Summary: ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்கள் எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க. தற்போது பலரும் அரோக்கிய உணவு பழக்கத்திற்கு மாறி வருகின்றனர் . சிறுதானிய உணைவை அன்றாட உணவாக பலர் சேர்த்துகொண்டு உள்ளார்கள். காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில், ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம், சுவை மிகவும் சூப்பராக இருக்கும், எனவே குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கப் ஒட்ஸ்
  • 1/4 கப் ரவா
  • 1/4 கப் கடலை மாவு
  • 2 கப் மோர்
  • 2 Tbsp கேரட்
  • 2 Tbsp முட்டை கோஸ்
  • 1 Tbsp துருவிய தேங்காய்
  • 2 Tbsp குடை மிளகாய்
  • 1 Tsp மிளகு
  • 1 Tsp சீரகம்
  • 1 Tbsp முந்திரி பருப்பு
  • 1/2 Tsp மிளகு தூள்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 தோசைக்கல்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஓட்ஸ் மற்றும் ரவையை ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்து பின் குளிர வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
  2. அதன் பின் கடாயில் கடலை மாவையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. பின்பு கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். தேங்காயை நன்கு தேங்காயை துருவி கொள்ளவும். அதுதுடன் மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
  4. பின் நாம் வறுத்து அரைத்த மாவு மற்றும் கடலை மாவை ஒன்றாக சேரத்து அதனுடன் உப்பு போட்டு சுலக்கவும். பின் இதனுடன் மோர் விட்டு கரைக்கவும்
  5. பின் இதில் நாம் பொடித்த மிளகு சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் சேர்த்து அதனுன் கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் கலக்கவும்.
  6. பின் மாவை ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்தவுடன், வழக்கம் போல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சுடானதும், மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் ஒட்ஸ் ஊத்தப்பம் தயார்.