முருங்கைக்கீரை முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க!

Summary: முருங்கை மரத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் உணவாக இருக்கிறது அல்லது பொருட்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது முருங்கைக்கீரையில் தான். இவ்வாறு எப்பொழுதும் கீரை பொரியல் என்று சொன்னாலே வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு முட்டை பொரியலுடன் கீரையை சேர்த்து சமைத்து கொடுத்து பாருங்கள். இதன் டேஸ்டான சுவைக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கட்டு முருங்கைக்கீரை
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 முட்டை
  • 3 வர மிளகாய்
  • 2 Tbsp எண்ணெய்
  • 1 Tsp கடுகு
  • 1 Tsp கடலைப்பருப்பு
  • 1 Tsp உளுந்த பருப்பு
  • 2 Tbsp துருவிய தேங்காய்
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பாத்திரம்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில் நன்கு அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,
  2. பின் அதில் அலசிய முருங்கைக்கீரையைப் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு தூவி, பாத்திரத்தை மூடி வைத்து குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  4. பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி, பொரியல் போன்று நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
  5. பின் அதில் வேக வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து, மிதமான தீயில் நன்கு கிளறி இறக்கி, துருவிய தேங்காயை சேர்த்து வதக்கினால் முருங்கைக்கீரை முட்டை பொரியல் ரெடி.