ருசியான முட்டை மசாலா இனி மேல் இப்படி செய்து பாருங்க!

Summary: சப்பாத்தி, இட்லி, தோசை, பிரைடு ரைஸ் என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட ஒரு மசாலா முட்டை பொரியல் எப்படி செய்றதுன்னு இந்த பதிவில் பார்க்க போறோம். முட்டையை வேக வைத்து தோல் உரித்து பாதியாக வெட்டி மசாலா தடவி பொரித்திருப்போம். ஆனால் இந்த பதிவில் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கு நண்பர்களே. என்னனு தெரிஞ்சிக்கணுமா ?. வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 4 முட்டை
  • 2 tsp எண்ணெய்
  • கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1/2 tsp மிளகாய் பொடி
  • 1/2 tsp மல்லி பொடி
  • 1/4 tsp சீராக பொடி
  • 1/4 tsp மஞ்சள் பொடி
  • 1/4 tsp மிளகு பொடி
  • 1/4 tsp சோம்பு பொடி
  • உப்பு
  • தண்ணீர்
  • மல்லி இலை

Equipemnts:

  • 1 வானொலி

Steps:

  1. அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் நீளமாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்ததாக ஒரு தக்காளி சேர்த்து வதக்கி விடவும். வெங்காயம் தக்காளி நன்கு வெந்து வதங்கி வந்ததும்.
  3. பின்பு மிளகாய் பொடி, மல்லி பொடி, சீரக பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சோம்பு பொடி, உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
  4. எண்ணெய் நல்லா பிரிஞ்சி வந்ததும், மஞ்ச கரு கலங்காம முட்டையை ஓடச்சு சேர்க்கவும். இப்போ மறுபடியும் மூன்று நிமிடம் மூடி வச்சிடுங்க. முட்டை நல்லா வேகட்டும். இப்போ முட்டையை திருப்பி போட்டு இரண்டு நிமிடம் வேக விடுங்க.
  5. இப்போ மஞ்ச கரு இருக்குற இடத்துல கரண்டியால் அழுத்தி முட்டையை இரண்டாக பிரித்து விடவும். இப்படி செஞ்சா மசாலா முட்டையோடு ஒன்னு சேர்ந்து அருமையான சுவையை தரும்.
  6. கடைசியா கொஞ்சம் மல்லி இலை தூவி இறக்கி வச்சா… மணக்க மணக்க சுவையான முட்டை மசாலா ரெடி. மறக்காம செஞ்சு பாருங்க நண்பர்களே…!