காரசாரமான கடப்பா கார தோசை இப்பட ஒரு தரம் செய்து பாருங்கள்!

Summary: கடப்பா தோசை என்றாலே தனி சுவை தான்.. அதிலும் கடப்பா கார தோசை இன்னும் பிரமாதம்.நெய் தோசை, பொடி தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை என அனைத்தையும் சாப்பிட்ட நீங்கள் இந்த கடப்பா கார தோசையை சாப்பிட்டால் அந்த ருசி உங்களுக்கு மறக்கவே மறக்காது. அதிலும் கார சாரமாக சாப்பிடுபவர்களுக்கு இது ஏற்ற உணவு. சட்டினி, சாம்பார் வைத்து தொட்டு சாப்பிட்டால் அரு சுவை தான்.. இந்த பதிவில் கடப்பா தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 10 பல் பூண்டு
  • 3 tsp பொறி கடலை
  • 10 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tsp சீரகம்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பத்து பல் பூண்டு மற்றும் மூன்று தேக்கரண்டி பொறிகடலையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. பின்பு ஊற வைத்த வர மிளகாய் உடன் ஒரு பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  3. அதன் பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து நெருப்பின் அளவை குறைவாக வைத்து கல்லை சூடேற்றவும்.
  4. அதன் இரண்டு கரண்டி மாவு எடுத்து கல் தோசை போல அல்லது நைஸாக உங்களுக்கு ஏற்றார் போல் ஊற்றி கொள்ளுங்கள்.
  5. பின்பு நாம் மையாக அரைத்து வைத்துள்ள வற்றல் சீரக விழுதை தோசை மேல் சிறிது தடவி விடவும்.
  6. அதற்க்கு மேல் அரைத்து வைத்த பூண்டு பொடியை சிறிது மழை சாரல் போல் தூவி விடவும். பொடிய தூவிய பின் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து தோசையை ஒரு பக்கம் முடி வைக்கவும்.
  7. அதன் பின் பொன்னிறமாக வெந்து வந்தவுடன் சுட சுட பரிமாறுங்கள். அவ்வளவு தான் கடப்பா கார தோசை தயாராகிவிட்டது.