ருசியான கத்திரிக்காய் வறுவல் இனி இப்படி செய்து பாருங்க!

Summary: கத்திரிக்காய் வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். இதனை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்க.

Ingredients:

  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 பட்டை
  • எண்ணெய்
  • 250 கிராம் கத்திரிக்காய்
  • ¾ ஸ்பூன் கடுகு
  • 5 பல் பூண்டு
  • ¾ கப் வெங்காயம்
  • கருவேப்பிலை
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1¼ ஸ்பூன் மிளகாய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல், மல்லி விதை, சோம்பு, சீரகம், வெந்தயம், மிளகு, சேர்த்து சேர்த்து வறுக்கவும். பாதி வருத்தும் பட்டை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  2. வறுத்தும் அதனை ஆறவிட்டு மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு அதே வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரிந்ததும், பூண்டு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு 4 நிமிடம் வேகவிடவும்.
  5. பாதி அளவு கத்திரிக்காய் வெந்ததும் மிளகாய் தூள், சேர்த்து கலந்து விடவும், பிறகு மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
  6. வெந்ததும் அரைத்து வைத்த மசாலா பொடியை அனைத்தையும் சேர்த்து கிளறி விட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை அனைக்கவும்.
  7. இப்பொழுது சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.