வீடே கமகமக்கும் கொடுவா மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: கொடுவாமீன் மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று பல விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் வாடையினால் சாப்பிடுவதற்கு பிடிக்காது. அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மசாலா சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் அந்த வாசனை எதுவும் இல்லாமல் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி சுவையான கொடுவாமீன் மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 4 கொடுவா மீன்
  • 2 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp கெட்சப்
  • 1 முட்டை
  • உப்பு
  • 1 tsp சோள மாவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி ஒரு பிளேட்டில் எடுத்து வைக்கவும். பின் ஒரு பெரிய பவுளில் சோளமாவு, மிளகாய்தூள், லெமன் ஜூஸ், கெச்சப் முட்டையின் வெள்ளைக்கரு ஊற்றி உப்பு போட்டு நன்றாக பிரட்டி விடவும்.
  2. பின்பு நாம் சத்த படுத்தி தை்திருக்கும் மீனில் எல்லா இடங்களிலும் மசாலா படும் படி தடவவும். அதனை 10 நிமிடம் அப்பிடியே மசாலாவில் ஊறவைக்கவும்.
  3. அதன் பின் நான்ஸ்டிக் பேன் அல்லது தோசைக்கல்லைஅடுப்பில் வைத்து அதில் ஆயில் 3 ஸ்பூன் விடவும், பின் எண்ணெய் சூடாகியதும். அதில் மீனை சேர்த்து வேக வையுங்கள்.
  4. ஒரு பக்கம் மீன் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு மறு பக்கம் கொஞ்ச நேரம் வேக வைத்து எடுக்கவும், பின்பு அதே பேனில் முட்டையின் மஞ்சள்கருவுடன் சிறிது உப்பு மிளகுதூள் போட்டு அடித்து கொள்ளவும்,
  5. அதனை தோசை போல் ஊற்றவும். அது ரெடியானதும் ஒரு பிளேட்டில் இந்த முட்டையை வைத்து அதன்மேல் இந்த மீன்களை வைத்து பரிமாரவும் . சுவையான கொடுவாமீன் மீன் வறுவல் பரிமாறுவதற்கு தயார்