கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா இப்படி செஞ்சி பாருங்க ?

Summary: சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சாப்பிடும் பொது இந்த மீன் மிளகு மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்றவாறு இந்த மீன் மசாலா காரசாரமாக இருக்கும் இதை ஒரு முறை வார இறுதியில் செய்து பருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டிருக்க செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து செய்யவும்.

Ingredients:

  • ½ கிலோ வறுக்கக்கூடிய மீன்
  • 200 கிராம் வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 கப் கொத்தமல்லி இலை
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளிக்கவும்.
  2. பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
  3. நன்றாக கிளறியதும், மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.
  4. பிறகு மீன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
  5. பிறகு அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
  6. இப்பொழுது சுவையான மீன் மிளகு மசாலா தயார்.