காரசாரமான சுவையில் டோஃபு இறால் பிரட்டல் இப்படி செய்து பாருங்கள்!

Summary: நாவூறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும், டோஃபு இறால் பிரட்டல். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த டோஃபு இறால் பிரட்டல் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். டோஃபு இறால் பிரட்டல் சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு டோஃபு இறால் பிரட்டல் சுவையாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • 400 கிராம் டோஃபு
  • 500 கிராம் இறால்
  • 1 சிவப்பு குடை மிளகாய்
  • 8 பல் பூண்டு
  • 1 Tbsp வெள்ளை மிளகு தூள்
  • 3 வெங்காய தூள்
  • 2 Tbsp சோயா சாஸ்
  • 2 Tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் டோஃபுவை ஒரு அங்குல விரல் கண துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும், பின் பூண்டையும் துருவி கொள்ளவும்.
  2. பின் வெங்காயத்தாள் மற்றும் குடைமிளகாயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் நாம் வைத்திருக்கு இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
  3. பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அதில் டோஃபுவை சேர்த்து லேசாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  4. பின்பு அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் துருவிய பூண்டை சேர்த்து வதக்கவும். மேலும் அதில் நாம் வைத்திருக்கும் இறாலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. இறால் பாதியளவு வெந்ததும் குடை மிளகாய் மற்றும் சேர்த்து சோயா சாஸை ஊற்றி அதில் நாம் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள டோஃபுவை போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
  6. பின் இறால் நன்றாக வெந்த பின்பு அதில் மிளகு தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான டோஃபு இறால் பிரட்டல் தயாராகிவிட்டது.