கமகமக்கும் ருசியான நண்டு மசாலா இப்படி செய்து பாருங்கள்!

Summary: ருசியான நண்டு மசாலா சுலபமாக செய்யும் முறை. நண்டு மசாலா ஒரு சுவையான அசைவ உணவு. நண்டு பொதுவாக அனைத்து நாட்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் ஆகும். நண்டுகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. எந்த வகையாக இருந்தாலும். இந்த செய்முறையில் செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்நிலையில் இப்போது நாம் நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • 500 கிராம் நண்டு
  • 1 கப் தயிர்
  • 1/2 Tsp கடுகு
  • 15 சின்ன வெங்காயம்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 Tsp இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 Tsp சீரகம்
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • உப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 3 Tbsp மல்லி தூள்
  • 1 Tbsp மிளகாய் தூள்
  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 Tsp சோம்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது வாங்கும் போதே சுத்தம் செய்து வாங்கி கொள்ளவும்.
  2. பின் சுத்தம் செய்த நண்டை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள். பின் நாம் வைத்திக்கு தயிருடன் நண்டை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்நததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதங்கி நன்கு வதக்கி நனகு குளிர வைக்கவும்.
  4. பின் வதக்கிய வெங்காயம், பட்டை, கிராம்பு, சோம்பு, மல்லித் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்தவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
  6. அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிட்டு, பிறகு தயிருடன் ஊற வைத்த நண்டைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  7. பிறகு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். அருமையான சுவையுடன், வித்தியாசமான நண்டு மசாலா குழம்பு ரெடி.