உடல் சூட்டை தனிக்கும் பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

Summary: உடல் சூட்டை தணிக்கும் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். நாளை சமையலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் அதற்கு முன் நாளே முடிவு செய்து வாங்கி வைத்து விடுவார்கள். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரு படி மேலே போய் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை பிரிட்ஜ்ல் வாங்கி அடுக்கி விடுவார்கள். அடிக்கும் வெயிலுக்கு ஏற்றார் உள்ள காய்கறிகளில் ஒன்று பூசணிக்காய். பூசணிக்காய் வாங்கி,, சுவையான மோர் குழம்ப இந்த பக்குவத்தில் வைத்து பாருங்க, யாராலும் இவ்வளவு ஈஸியா குழம்பு வைக்க முடியாது. வாங்க அதை எப்படி பண்ணலாம் என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கப் வெள்ளை பூசணிக்காய்
  • 1 Tbsp எலுமிச்சை சாறு
  • 1 கப் தயிர்
  • 1 தக்காளி
  • 2 Tbsp துவரம் பருப்பு
  • 1 Tbsp பச்சரிசி
  • 1 Tbsp தனியா
  • 1/4 Tsp மஞ்சள் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 Tsp சீரகம்
  • உப்பு
  • 2 Tbsp எண்ணெய்
  • 1/2 Tsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் துவரம்பருப்பு மற்றும் பச்சரிசையை அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு தயிரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கடைந்து வைக்கவும்.
  2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, ஊறவைத்த அரிசி பருப்பு இவைகளை சேர்த்து வதக்கவும்.
  3. பின் நாம் வறுத்த பொருட்களை குளிர வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  4. அதன் பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில நறுக்கிய பூசணிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து இவை மூழ்குமளவு தண்ணீரன ஊற்று பின் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  5. பின்பு பூசனிக்காய் நன்கு வெந்ததும் நாம் அரைத்த விழுதை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
  6. பின் மசாலா வாசனை போய் நன்கு கொதித்து வநததும் நாம் கடைந்து வைத்திருக்கமே் தயிரை ஊற்றி நுரைவரும் போது இறக்கி கொள்ளவும். பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். அவ்வளவுதான் சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு ரெடி.