கமகமக்கும் சுரக்காய் தோசை இப்படி செய்து பாருங்க!

Summary: சுரைக்காய் என்றால் உடனே நினைவுக்கு வருவது சுரைக்காய் பருப்பு கூட்டு தான். சுரைக்காய் குழம்பு, சுரைக்காய் கிரேவி கூட சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் சுரைக்காய் தோசை செய்து சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் அதனால் இப்படி ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டில் 2 தோசை சாப்பிடுபவர்கள் 4 அல்லது 5 தோசையை ருசித்து சாப்பிடுவார்கள். அதிலும் அடை தோசை என்றால் இன்னும் பிரமாதமாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் சத்தான உணவு. சுரைக்காய் நார் சத்தும், நீர் சத்தும் நிறைந்தது.

Ingredients:

  • 1 கப் இட்லி அரிசி
  • 1/2 கப் கடலை பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் முழு உளுந்த பருப்பு
  • 7 மிளகாய் வற்றல்
  • 500 கிராம் சுரக்காய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 Tbsp சீரகம்
  • 1/2 Tbsp பெருஞ்சீரகம்
  • உப்பு
  • 1 Tbsp எண்ணெய்
  • 1 Tsp கடுகு
  • 6 சின்ன வெங்காயம்
  • 1/2 Tbsp  கடலை பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லி

Equipemnts:

  • 1 மிக்ஸி (அ) கிரைண்டர்
  • 1 அகலமான பாத்திரம்
  • 1 தோசைக்கல்

Steps:

  1. நாம் எடுத்து வைத்திருக்கும் இட்லி அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, இவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து தண்ணீர் வைதனது நன்கு அலசி கொள்ளுங்கள்.
  2. பின்பு இதனுடன் நல்ல தண்ணீர் சேர்த்து அதில் ஏழு வர மிளகாய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  3. அதன் பின் நாம் வைத்திருக்கும் சுரைக்காயை பாதியாக வெட்டி அதன் மேற்புற தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  4. பின் ஒரூ மிக்ஸி ஜாரில் நாம் ஊறவைத்த வத்தல், தோல் நீக்கிய இஞ்சி, சீரகம், பெருங்காயம், சேர்த்து இதனுடன் நாம் ஊறவைத்த அரிசி பருப்பை இரண்டு கை அளவு சேர்த்து கொள்ளவும். அதை கொற கொறப்பாக அரைத்து.
  5. பின் அதனுடன் வெட்டி வைத்திருக்கும் சுரைக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மாவு கட்டியாகவும், கொற கொறப்பு தன்மையுடன் இருக்க வேண்டும்.
  6. பின் அரைத்த மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு விட்டு மீதம் உள்ள அரிசி பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
  7. அரைத்த மாவுடன் ஒரு தாளிப்பு சேர்க்க வேண்டும் அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் கடுகு, கடலை பருப்பு சேர்த்து பொறியவிடவும்.
  8. பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். அதோடு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்தே இரண்டு கொத்து கருவேப்பிளை, மல்லி இலை சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  9. அட்வளவுதான் பின் வழக்கம் போல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அடையாகவும் அல்லது தோசையாகவும் ஊற்றி சாப்பிடுங்கள் அற்புதமான சுவையில் இருக்கும்.