கமகமன்னு இறால் உருண்டை குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

Summary: இறால் பயன்படுத்தி கிரேவி, வறுவல், பொரியல் என பலவகை உணவுகள் செய்யப்படுகிறது. இந்த இறால் வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும். அந்த அளவிற்கு சுவையை கொடுக்கும். வீட்டில் இதனை சமைக்கும் பொழுது அக்கம் பக்கத்து வீட்டார் இன்று என்ன உங்கள் வீட்டில் என்று கேட்கும் அளவிற்கு இதன் வாசனையும் அப்படியே இருக்கும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக இருந்தாலும் இறால் உருண்டைக் அனைத்து மசாலாக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டதால், மிகுந்த சுவையுடன் இருக்கும். எனவே குழம்பும் படு ருசியாக இருக்கும். வாருங்கள் இந்த இறால் உருண்டைக் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

Ingredients:

  • 2 கப் இறால்
  • 2 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • புளி
  • 2 Tbsp மிளகாய் தூள்
  • 1 Tsp மஞ்சள் தூள்
  • 1/2 Tbsp கரம் மசாலா
  • உப்பு
  • 2 Tbsp எண்ணெய்
  • 1 Tsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் இறாலின் மேற்புற தோலை உரித்து தண்ணீர் வைத்து இரண்டு மூனறு முறை நன்கு அலசி எடத்து கொள்ளுங்கள்.
  2. பின் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சுத்தப்படுத்திய இறால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின் அரைத்த இறாலை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  3. பின் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கரைத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புப் போட்டு ஊற வைக்கவும். பின் நாம் வைத்திருக்கும் தக்காளி, வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி பூண்டை தோலுரித்து வைக்கவும்.
  4. அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் தக்காளி, வெங்காயம் மற்றம் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
  5. நாம் சேர்த்த வெங்காயம் நன்கு வெந்து, தக்காளி நன்கு மசிந்து வந்ததும் நாம் கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  6. பின் குழம்பு நன்கு கொதித்து வந்ததும் அதில் நாம் உருண்டையாக பிடித்து வைத்திருந்த இறாலை சேர்த்து குறைந்த தீயில் 15 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
  7. நாம் சேர்ந்த இறால் நன்கு வெந்து குழம்பு நன்கு கொதித்து வந்ததும் கடாயை கீழ் இறக்கி வைத்து. சுட சுட சோறுடன் பறிமாறவும்.