அறுசுவையான கொள்ளு ரசம் செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்.

Summary: பொதுவாக நாம் ரசம் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். கொள்ளு ரசம் நம் உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைக்க கூடிய சக்தி கொள்ளுவிற்கு உண்டு மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டா கொள்ளுவை வைத்து எப்படி ரசம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு குறித்த தொகுப்பில் காணலாம்.

Ingredients:

  • 1 கப் கொள்ளு
  • பாதி எலுமிச்சை பழம் அளவு புளி
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • ½ tbsp கடுகு
  • ¼ tbsp பெருங்காய பொடி
  • 6 பல் பூண்டு
  • எண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கொள்ளுவை ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள் கொள்ளு நன்றாக வறுபட்டு வந்ததும் பின் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  2. பிறகு இந்த நேரத்தில் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் சீரகம், மிளகு, பூண்டு மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு அரை அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு கொள்ளு வெந்து வந்ததும் இன்னும் சற்று தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் அதன் பிறகு கொள்ளை தண்ணீரில் கரைத்தால் கெட்டியான கொள்ளு தண்ணீர் கிடைக்கும்.
  4. பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சூடேறும் வரை காத்திருக்கவும் என்னை சூடேறியவுடன் கடுகு, பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
  5. தாளித்த பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை வடிகட்டி ஊற்றவும் பின்பு இதனுடன் கொள்ளு கரைசலையும் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள சீரகம் மிளகு பூண்டு இவற்றையும் ரசத்துடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  6. பின்பு ரசம் கொதிக்கும் பக்குவத்திற்கு வரும் போது கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும் இப்போது சுவையான கொள்ளு ரசம் இனிதே தயாராகிவிட்டது.