Summary: மணக்க மணக்க மீன் கட்லெட் வைப்பது எப்படி? ஒருமுறை இப்படி சுவைத்து விட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன் கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். முள் இல்லாத மீன் வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே செய்முறையில் செய்தால் ,நாவூறும் சுவையில் மீன் கட்லெட் வீட்டிலே அடிக்கடி செய்து ருசிக்கலாம். இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீன் கட்லெட்டை ஹோட்டல் ஸ்டைலில் சமைக்க போகின்றோம். மீன் வசம் புடிக்காமல் சாப்பிடாதவர் கூட இந்த மீன் கட்லெட்டை விரும்பி உண்பர். வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் கட்லெட் கற்றுக் கொள்வோம்.