கிராமத்து ஸ்டைல் சுவையான கத்தரி பூண்டு தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் கத்தரி இருந்தால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடிஸ் செய்யலாம்.அது தான் கத்தரி பூண்டு தொக்கு,இது இட்லி, தோசை, மட்டுமின்றி சூடான சாதத்திற்கும் ,சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். கத்திரிக்காயை எப்போதும் போல் குழம்பு,பொரியல் என்று செய்யாமல் ,இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 8 கத்தரிக்காய்
  • 2 தக்காளி
  • 22p பூண்டு
  • 11 சின்ன வெங்காயம்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 Tsp கடுகு
  • 1 tsp வெந்தயம்
  • 11 கறிவேப்பிலை
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • கடாய்
  • கரண்டி

Steps:

  1. கத்தரி பூண்டு தொக்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  2. அத்துடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  3. மேலும் அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக குலைந்து வரும்போது, நான்காக நறுக்கிய கத்தரிக்காய் – உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய்யிலேய வேகும் வரை விடவும். 
  4. பின் சிறிது தண்ணீர், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். நன்றாக வெந்து தொக்கு பதம் வரும்போது, மேலும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். சுவையான கத்தரி பூண்டு தொக்கு தயார்.