நாவில் எச்சி ஊறும் ருசியான பாலக் மட்டன் தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: பாலக் மட்டன் தொக்கு, இதன் சுவைக்கு வீட்டிலுள்ளவர்கள் உங்களை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள் ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வீட்டில் உள்ளனர். அன்றைய தினம் கடைகளுக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது . இன்றைய காலகட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி மட்டன் சமைப்பதாக இருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி பாலக் மட்டன் தொக்கு செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 500 gm ஆட்டுக்கறி
  • ½ Kattu பாலக் கீரை
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 இவங்கப்பட்டை
  • 2 கிராம்பு
  • ½ tsp சோம்புப் பொடி
  • 3 tbsp நல்லெண்ணெய்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 15 gm கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • குக்கர்
  • கரண்டி
  • கடாய்

Steps:

  1. பாலக் மட்டன் தொக்கு செய்ய முதலில் ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு, குடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  2. பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புப் பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கழுவிய ஆட்டுக்கறி துண்டுகளை அதில் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி மிதமான சூட்டில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும் குக்கரை ஆவி நின்றவுடன் திறந்து, கீரையை சேர்க்கவும்
  4. அதன் பின் மீதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் வேக விடவும். தொக்கு பதத்திற்கு வந்தவுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பாலக் மட்டன் தொக்கு தயார்.