காரசாரமான சுவையில் காடை பெப்பர் மசாலா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: குறைந்த கொழுப்புள்ள காடை, கோழி பிரியர்களுக்கு பரிசு. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் வார இறுதி நாட்களில் அசைவ உணவை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த காடை பெப்பர் மசாலா ஒரு முறையேனும் சமைத்து, ருசி பார்த்துவிடுங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காடை பெப்பர் மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காடை பெப்பர் மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 3 காடை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tbsp தயிர்
  • 20 gm கொத்தமல்லி
  • 5 gm புதினா
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகுத் தூள்
  • 1 ts கரம் மசாலா தூள்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 ts மல்லி தூள்
  • தேவையான அளவு உப்பு
  • பொரிக்க எண்ணெய்

Equipemnts:

  • கடாய்
  • கரண்டி

Steps:

  1. காடை பெப்பர் மசாலா செய்ய முதலில் காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.
  2. இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பிரட்டவும். 3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு நன்கு கிளரவும்.
  4. அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும். பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 15 நிமிடம் வேக விடவும்.
  5. இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான காடை பெப்பர் வறுவல் ரெடி.