வீடும் மணக்கும் சாப்பிட்ட கையும் மணக்கும் வகையில் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Summary: என்னதான் வீடுகளில் சிக்கன் கிரேவி வைத்தாலும் ஹோட்டலில் வைக்கப்படும் சிக்கன் கிரேவிகளுக்கு தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் நீங்கள் கவலை பட வேண்டாம் ஹோட்டல் சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி சிக்கன் கிரேவி செய்வது என்று பார்க்கலாம். இப்படி ஒரு தடவை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உங்களது சமையலுக்கு தான் அடிமையாக இருப்பார்கள். இப்படி ஹோட்டலில் சிக்கன் கிரேவி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என என அனைத்தையும் இன்று இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ¾ கிலோ சிக்கன்
  • 1 tbsp உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மல்லித்தூள்
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 2 tbsp எலுமிச்சை சாறு
  • 1 tbsp எண்ணெய்
  • 2 tbsp தயிர்
  • எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • எண்ணெய்
  • 1 ½ tbsp இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • 1 tbsp மிளகாயத்தூள்
  • 1 tbsp மல்லித்தூள்
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • ¼ கப் கீரிம்
  • 2 tbsp கஸ்தூரி மேரி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் சிக்கனை மசாலாவில் ஊற வைக்க வேண்டும் அதற்காக சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், எலுமிச்சைச்சாறு, எண்ணெய் மற்றும் தயிர் போன்ற பொருட்களை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. சிக்கனை நன்றாக மசாலாவுடன் நன்கு கலந்தவுடன் ஒரு மணி நேரங்கள் நன்றாக சிக்கனை ஊற வையுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும் பின்பு இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை வதக்கி எடுத்து கொள்ளுங்கள்.
  4. தக்காளி மசிந்ததும் கடாயை இறக்கி குளிர வையுங்கள். வெங்காயம் தக்காளியும் குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு சிக்கன் மசாலாவில் நன்கு ஊறியதும் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் நாம் ஊற வைத்த சிக்கனை எடுத்து போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
  6. இப்படி ஒரு பத்து நிமிடம் சிக்கனை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கி எடுத்தவுடன். பின் சிக்கனை பவுளில் தனியாக எடுத்துவிட்டு மீதம் இருக்கும் எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பின்பு கிரேவி நன்றாக கொதித்து வற்றியதும் இதனுடன் நம் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து கொள்ளவும்.
  8. அதன் பின் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளரி விடவும். ஐந்து நிமிடம் நன்கு கொதித்து வந்தவுடன் கீரிம், கஸ்தூரி மேரியும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  9. பின்பு இன்னும் ஐந்து நிமிடம் நன்றாக கிரேவியை கொதித்து வந்தவுடன். கொத்தமல்லியை சிறிது சிறிதாக வெட்டி சிறிது தூவி விட்டு காடாயை இறக்கி விடவும் அவ்வளவுதான் ஹோட்டல் சுசையில் சிக்கன் கிரேவி தயார்.