தமிழரின் பாரம்பரிய சுவையான கேப்பை கூழ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: சிறு தானியங்களை பயன்படுத்தி அவற்றை கூழாக செய்து அதை உணவாக எடுத்துக் கொள்வதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் தான் நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கேப்பை கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கேப்பை கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

Ingredients:

  • 1 கப் கேப்பை மாவு
  • 3 கப் தண்ணீர்
  • 1 துண்டு இஞ்சி
  • 1  பச்சை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • 6 கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கப் கேப்பை மாவு எடுத்து ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவிலான தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
  2. பின் தண்ணீர் நன்றாக சூடேறியதும் நம் கரைத்து வைத்திருக்கும் கேப்பை மாவு இதனுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருங்கள். பின்பு ஒரு 12 நிமிடங்கள் கேப்பை மாவை அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டு இருங்கள்.
  3. பின் கேப்பை மாவு தண்ணீர் வற்றி கெட்டியான பதத்திற்கு வரும்வரை கிளறிவிட்டு பின் பாத்திரத்தை இறக்கி கேப்பை கூழை நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு பச்சை மிளகாயை நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு கேப்பை மாவு நன்கு குளிர்ந்ததும் உங்களுக்கு தேவையான அளவு மாவு எடுத்து ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் முக்கால் கப் அளவு தயிர், இடித்த மிளகாய், நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கருவேப்பிலை இலைகளை நறுக்கி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
  5. பின் உங்களுக்கு குடிப்பதற்கு ஏற்ற தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான கேப்பை கூழ் தயாராகிவிட்டது.
  6. இதனுடன் நீங்கள் மாங்காய், மிளகாய் வத்தல், கத்திரிக்காய் வத்தல் வெண்டைக்காய் வத்தல் போன்றவற்றை வைத்து சாப்பிடும் போது அட்டகாசமான சுவையில் இருக்கும்.