தித்திக்கும் சுவையில் 90'sகிட்ஸ் மாவு உருண்டை இப்படி ஓரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: பாசிப்பருப்பை இப்படி உருண்டையகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. சுவை நிறைந்துள்ள செட்டிநாடு மாவு உருண்டை ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான செட்டிநாடு மாவு உருண்டை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup பாசிப்பருப்பு
  •  cup சீனி
  • ½ cup நெய்

Equipemnts:

  • கடாய்
  • கரண்டி

Steps:

  1. செட்டிநாடு மாவு உருண்டை செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.வறுத்த பாசிப்பருப்பை அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. சீனியை மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த சீனி பாசிப்பருப்பை சலித்துக் கொள்ள வேண்டும்.
  3. கடாயில் நெய் ஊற்றி அரைத்தவற்றை போட்டு நன்றாக கிளற வேண்டும்.பாதி சூடு இருக்கும்போது உருண்டை பிடிக்க வேண்டும்.இப்பொழுது சுவையான செட்டிநாடு மாவு உருண்டை தயார்.