ருசியான டீக்கடை கொத்தமல்லி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் கொத்தமல்லி இலை வடை சாப்பிட்டு இருக்கீங்களா? கொத்தமல்லி இலை வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கொத்தமல்லி இலை வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup கொத்தமல்லி இலை
  • ½ cup கோதுமை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • 1 tbsp கடலை மாவு
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tsp சீரகத்தூள்
  • 1 tsp மல்லித்தூள்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • வாணலி
  • கரண்டி

Steps:

  1. கொத்தமல்லி இலை வடை செய்ய முதலில் கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீரை நன்றாக வடிகட்டி கொத்தமல்லி இலையை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு, கோதுமை மாவு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின்பு கொத்தமல்லி இலையை சேர்க்க வேண்டும்.
  3. இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லி வேக வைப்பது போல் ஒரு தட்டில் எண்ணெய் தடவி கொத்தமல்லி இலை கலவையை போட்டு சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த கொத்தமல்லி இலை கலவையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.இப்பொழுது சுவையான கொத்தமல்லி வடை தயார்.