காரசாரமான சுவையில் தழை வாழை மீன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். வாங்க நாமும் இந்த வித்தியாசமான தழை வாழை மீன் செய்ய கற்றுக் கொள்வோம். அசத்தலான சுவையில் வித்தியாசமான மசாலா கலவையோடு தழை வாழை மீன் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தழை வாழை மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 முள் இல்லாத மீன்
  • தழை வாழை இலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 பூண்டு
  • 1 இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 2 முட்டை
  • 1 cup சாதம்
  • 1 tsp மஞ்சள் தூள், மிளகு தூள்
  • 11 கறிவேப்பிலை
  • 1 tsp மிளகு, சீரகம்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

Equipemnts:

  • கடாய்
  • கரண்டி

Steps:

  1. தழை வாழை மீன் செய்ய முதலில் மீன்களை சுத்தம் செய்து கழுவி மேல் பக்கத்திலும், குடல் இருந்த பக்கமும் மஞ்சள் தூள் தடவி வைக்கவும். தோல் உரித்த சி வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் அரைக்கவும்.
  2. மீனை எடுத்து அதன் குடல் இருந்த பகுதிக்குள் அரைத்த விழுதை நிரப்பி, மீன் மீது உப்பு, மிளகு தூளை தடவவும். மீனை ஒரு தழை வாழை இலை எடுத்து அதன் நடுவில் ஒரு கைப்பிடி சாதத்தை பரப்பி அதன் மீது வைக்கவும்.
  3. ஒரு முட்டையை அடித்து, மிளகு தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீன் மீது ஊற்றி, ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும். பின்னர் வாழை இலையை மடித்து நார் எடுத்து இலையைக் கட்டவும். இதை இட்லி குண்டானில் வைத்து மூடி 15 நிமிடம் வேக விடவும். சுவையான தழை வாழை மீன் தயார்.