காரசாரமான சுவையில் நெத்திலி கருவாட்டு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: கருவாட்டு குழம்பு தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும். உங்களுக்கு கருவாட்டு குழம்பு பிடிக்குமா? அப்படியானால் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலிக் கருவாடடு கொண்டு ஒரு அற்புதமான நெத்திலிக் கருவாட்டு செய்யலாம். இந்த நெத்திலிக் கருவாட்டு குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு கருவாட்டு குழம்பு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த சுவை சற்று காரணமாகத்தான் இருக்கும் என்பது அனைவருக்குமே பிடிக்கும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நெத்திலிக் கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 200 gm நெத்திலி
  • 1  புளி
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பூண்டு பல்
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • 1 tbsp கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 3 tbsp நல்எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. நெத்திலிக் கருவாட்டு குழம்பு செய்ய நெத்திலியின் தலையையும், வாலையும் கிள்ளிவிட்டு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். 5 முறை நன்றாக அலசி எடுக்கவும். அழுத்தாமல் லேசாக கழுவி தண்ணீர் எடுத்து வைக்கவும்.
  2. புளியை தண்ணீரில் கரைத்து சாறு எடுத்து மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  3. புளியை தண்ணீரில் கரைத்து சாறு எடுத்து மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  4. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.
  5. பிறகு புளிச்சாற்றை ஊற்றி கொதி விடவும். குழம்பு லேசாக கெட்டியாகும் போது நெத்திலி கருவாட்டைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். சரியாக 10 நிமிடத்தில் இறக்கவும். சூடான சுவையான நெத்திலிக் கருவாட்டு குழம்பு தயார்.